சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(16) மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலும், கிராமியப் புரட்சி மற்றும் என்டர்ப்ரைஸ் சிறிலங்கா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்று பிரிதொரு அணியாக செயற்படும் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுள் யாரும், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.