கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
தற்போது (இன்று – 28) அம்பாறையில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
டபிள்யூ.டி.வீரசிங்க, சந்திரா தெவரப்பெரும, டி.எம்.ஜயசேன ஆகிய மூன்று பேரே இவ்வாறு பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மஹிந்த அணியினரால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)