சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க கட்சியின் பிரதிநிதிகள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலை குறித்து தீர்மானங்கள் எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று இரவு கூட இருந்ததாகவும் பின்னர் அது ரத்து செய்யப்படாதாகவும் அதன் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

எனினும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தாக்கல் செய்த மனுவின் மூலம் அந்த செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் நேற்று இரவு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதன்போது மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் பலர் கைச்சாத்திட்டு ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத.

(riz)