கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு, டொரிங்டன் பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.