சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஐஎஸ் தாக்குதல் நடாத்த திட்டம்

(FASTNEWS | COLOMBO) – அமெரிக்காவில் இன்று(04) சுதந்திர தினக் கொண்­டாட்­டங்கள் இடம்பெ­ற­வுள்ள நிலையில் அதனை இலக்கு வைத்து வெள்ளையின மேலா­திக்­க­வாத குழு­வி­னரும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களும் தாக்­குதல் நடத்த திட்­ட­மிட்­டி­ருக்கக்கூடிய அபாயம் உள்­ள­தாக அந்­நாட்டு பாதுகாப்பு புல­னாய்வுப் பிரி­வான எப்.பி.ஐ. (FBI), பாது­காப்பு திணைக்­களம் மற்றும் தேசிய தீவி­ர­வாத முறி­ய­டிப்பு நிலையம் என்­பன எச்­ச­ரித்­துள்­ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து வெளிப்­படும் பாரிய தீச்­சு­வாலை முன்­பாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் நிற்­பதை போலி­யாக வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் அந்தத் தீவி­ர­வா­தி­களால் வெளியி­டப்­பட்டுள்ளது. அத்­துடன் நியூ­யோர்க்கில் மான்­ஹெட்டன் பாலத்­திற்கு அரு­கி­லுள்ள வீதியில் விமா­ன­மொன்று விழுந்து நொறுங்­கு­வ­தையும் படை­வீரர் ஒருவர் அச்­சத்­துடன் ஓடு­வ­தையும் தீவி­ர­வா­தி­களால் வெளியி­டப்­பட்ட மற்­றைய புகைப்­ப­டங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

மேலும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு தயாராக செம்மஞ்சள் ஆடை அணிந்து தீவிரவாதிகளின் முன்பாக தரையில் மண்டியிட்டிருப்பதாக தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட சுவரொட்டியொன்றில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.