சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு…

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடமிருந்து குறித்த ஆயிரம் ரூபா நாணயத் தாளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த ஆயிரம் ரூபா நாணயத்தாளில், நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் பொறிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.