சுதந்திர தின முன்னேற்பாடுகளுக்காக இன்று முதல் காலி வீதி தற்காலிகமாக மூடப்படும்…

இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகளுக்காக இன்று(27) முதல் 30 ஆம் திகதி வரையும் மேலும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியும் காலி வீதியில் செரமிக் சந்தியில் இருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#rishma