சுனில் சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள் இருந்து தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்த சந்தேக நபர், லுணுகம்வெஹர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் சம்வத்தில் குற்றவாளியான சுணில் சாந்த வெலிக்கட சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த போது சிறைச்சாலையில் அண்மையில் தப்பிச் சென்றிருந்தார்.
தப்பிச் சென்றிருந்த பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான சுணில் சாந்த பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.