ஒருகொடவத்த சுங்க பிரிவில் வைத்து கைப்பற்றப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களில் உரிமையாளர் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளரும் சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்தன தெரிவித்துள்ளார்.
குறித்த பாரவூர்த்தியில் உரிமையாளர் தொடர்பில் தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. இத்தாலியில் இருந்து குறித்த மதுபானங்கள் மற்றும் போதை பொருள் அடங்கிய பாரவூர்தி யாரிடம் இருந்து யாருக்கு அனுப்பப்படுகின்றது போன்ற விபரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நேற்று கைப்பற்றப்பட்ட இந்த மதுபானங்கள் மற்றும் போதை பொருளில் 2.9 மில்லியன் பெறுமதியான ஹஷீஸ் போதைப் பொருள் 2.945Kg, 80 மில்லியன் பெறுமதியான குஷ் என்ற கஞ்சா 2Kg,அதிக செறிவைக் கொண்ட 220 மதுபான போத்தல்களும், 225 வைன் போத்தல்களும், 100 பியர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி ஒரு கோடியே ஒரு லட்சத்து 57,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், சுங்க பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.