அமெரிக்க டொலர்களை, சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கொண்டுச் செல்வதற்கு முயன்ற நால்வர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறித்த நால்வரிடம் இருந்தும், கைப்பற்றப்பட்ட அமெரிக்கா டொலர்களது பெறுமதியானது 2 கோடியே 75 இலட்சத்துக்கு 24 ஆயிரம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவை கசினோ விளையாட்டில் இலங்கையில் வெற்றியீட்டிய பணம் என குறித்த நபர்கள் தெரிவித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
R.Rishma