(FASTNEWS|COLOMBO) நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 10 கிராம் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெல்லம்பிட்டி – மீதொட்டமுல்லை பகுதியில் வைத்து 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்த ஒருவர் கொழுப்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மினுவாங்கொட – மஹயாய வத்தை மற்றும் வீரகுல தெமட்டகலந்த பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.