ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்கள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.