சுமார் 90Kg ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐவர் கைது..

கொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 29 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் ஏனைய நபர் 41 வயதுடைய ஆப்கானிஸ்தாக எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கிலோ வீதம் 90 பெக்கட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.