சுமார் 1200 கோடி பெறுமதிமிக்க கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது..

ஈக்வடோர் நாட்டிலிருந்து இலங்கை வழியாக இந்தியா நோக்கி  செல்லவிருந்த கப்பலில் இருந்து 800 கிலோகிராம்  ​கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் வைத்து குறித்த கப்பலை சுற்றிவளைத்த  பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர், மேற்கொண்ட சோதனையின் போது இந்த போதை​பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

புலனாய்வு தகவல்களை அடுத்து, குறித்த கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த போதைப்பொருள் சுமார் 1200 கோடி பெறுமதிமிக்கதென தெரிவிக்கப்படுகின்றது.