(FASTNEWS|COLOMBO) சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட ஒன்பது பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவர்களிடம் இருந்து சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5.2 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டிருப்பதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர்.
சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.