மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சுமார் 42,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.