சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…

சட்டவிரோமாக சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட் தொகையுடன் நபரொருவர் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு – கிரேண்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.