சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடி விவகாரத்திலிருந்து கெஹெலிய விடுதலை

சுயாதீன தொலைக்காட்சி நிதி மோசடி சம்பவத்துடன் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு தொடர்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன தொலைக்காட்சியில் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அப்போதைய ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அப்போதைய சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் அனுர சிறிவர்தன உள்ளிட்ட பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், இந்த நிதி மோசடிச் சம்பவத்திற்கு கெஹலிய பொறுப்புதாரியல்ல என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்னும், தேவை ஏற்பட்டால் அவரை சாட்சியாளராக பெயரிட முடியும் என தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் குறித்த முறைப்பாட்டிலிருந்து கெஹலிய விடுவிக்கப்பட்டுள்ளார்.