சுற்றரிக்கைகளின் படி பணிகளை வரையறை செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள களுத்துறை பிரதேச மக்களுக்கான நிவாரண பணிகள் குறித்து தேடிப்பார்ப்பதற்காக குறித்த பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றை ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது களுத்துறை மாவட்ட செயலக காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.