சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்…

நாட்டில் சுற்றாடலுக்கு ஏற்றவகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிதாக கைத்தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவும், வசதிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேசத்தின் போக்கிற்கு அமைவாக பசுமையான கைத்தொழில் உற்பத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மேலும் தெரிவித்தார்.