(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சகல சுற்றுநிரூபங்களையும் இரத்து செய்து ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இன்று(26) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவையின் தலைவி வசந்தா ஹந்தபான்கொட தெரிவித்திருந்தார்.