கொழும்பு – கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டமானது ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 250ற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளதுடன், அந்த பகுதியில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.