இந்த வருட இறுதிக்குள் 23 லட்சம் சுற்றுலாத் துறையினர் இலங்கை வருவார்கள் என சுற்றுலாத்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் உறுதி செய்துள்ளார்.
தற்போது விருந்தகங்களில் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்த இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் உள்ள விருந்தகங்களில் 65% ஆன அறைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குகின்றனர்.
எப்படியிருப்பினும் இந்த எண்ணிக்கை எதிர்வரும் சில மாதங்களில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
(rizmira)