கண்டி பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு பிரச்சினை இருக்குமாயின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று(07) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர், செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயேஅவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இத்தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் தமது மாதாந்த சம்பளத்திற்கு பின்னர் தமது தேவைகளுக்காக நகரங்களுக்கு வருவோர் தொடர்பிலான பாதுகாப்பு குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.