கடந்த மார்ச் மாதத்தில் இந்நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.8 வீதமாக அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் முதலாவது காலாண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 22.1 ஆக காணப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அதிகரிப்புக்கு சீன, இந்திய பயணிகள் வருகை பெரியளவில் தாக்கம் செலுத்தியுள்ளதுதாகவும், முதலாவது காலாண்டு வருமானம் 969.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.