சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.