சுற்றுலா விடுதிகள், முகாம்கள் மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் அனைத்தும் கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.