சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த இடம் இலங்கை

(FASTGOSSIP|COLOMBO)- இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடும் அஜாஸ் படேல் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தொடர்ச்சியாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இருந்தார்.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த முறையில் ஆடக்கூடியவர்கள் என்பதால் விக்கெட் பெற பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் குறிப்பிட்டார்.

இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அஜாஸ் படேல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சுழல் பந்துவீச்சாளராக இருந்தால் திறமையை வெளிப்படுத்த ஆடுகளம் உதவ வேண்டும். இலங்கை என்பது கடந்த காலத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த இடமாக இருந்தது. சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். இங்கு வரும்போதே பந்து சுழலும் என்பது தெரியும். இந்த சூழலில் பந்தை எந்த வேகத்தில் செலுத்துவது, எந்தப் பந்துக்கு வீரர்கள் துடுப்பெடுத்தாடுவார்கள் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. என்னை பொறுத்தவரை அடிப்படையாக நான் அந்த இலக்குகளுக்கு பந்து வீசுவேன்” என்று படேல் குறிப்பிட்டார்.

இலங்கை வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடுபவர்கள் என்பது எமக்குத் தெரியும். அதனை மதித்து நீண்ட நேரத்திற்கு சிறந்த இலக்கிற்கு பந்து வீச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.