சுவசெரிய அம்யூலன்ஸ் சேவை – நாடு முழுவதும் அலுவலகங்கள்…

(FASTNEWS|COLOMBO) சுவசெரிய என்ற அவசர அம்யூலன்ஸ் சேவைக்காக அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

1990 என்ற இலக்கத்தில் செயற்படும் சுவசெரிய சேவைக்கான மொபைல் அப் வசதியை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் ஓகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் இவ்வாறான 100 அலுவலகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. தற்போது 200 அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், ஒரு அலுவலகத்திற்கென 20 லட்சம் ரூபா செலவிடப்பட்டிருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.