இந்திய அரசாங்கத்தின் நிதியுத உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுவசெரிய அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்பொழுது இடம்பெற்று வரும், சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை எட்டு மாகாணங்களில் எந்தவித கட்டண அறிவீடுகளும் இன்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கி வருவதோடு, சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று சுவசெரிய அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.