சுவிஸ்ட்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(16) பயணிக்கவுள்ளார்.
பிரதமர் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் பிரதமர் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக பொருளாதார மாநாட்டில் 40 இற்கும் அதிக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர்.
இதன்போது பிரதமர் முன்னணி அரச தலைவர்கள் மற்றும் முன்னணி சர்வதேச வர்த்தகர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.