சுவிஸ் நிறுவனமொன்றின் வழிகாட்டலிலேயே சமஷ்டி முறைமை முன்வைக்கப்பட்டதாக குற்றம்

அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி தொடர்பான முன்மொழிவை சுவிஸ் நிறுவனம் ஒன்றின் வழிகாட்டலில் வடமாகாண சபை தயாரித்துள்ளதாக முன்னணி சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுவிஸ் நாட்டின் பிரிபுக் பெடரல் நிறுவனம் எனும் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் மூவருக்கு இலங்கைக்கு வருகை தருமாறு வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் உதவியுடன் தூதரக நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்து குறித்த மூவரும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, வடக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரிபுக் நிறுவன முக்கியஸ்தர்களின் வழிகாட்டுதலின் கீழேயே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி தொடர்பான பிரேரணை வரையப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரேரணை மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் வகையில் மேற்கத்தேய நாடுகளின் தூதரகங்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது என்றும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.