சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை: மோடி ஏமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –டில்லியில் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய நிகழ்வான நெருப்பு வளையத்துடன் கூடிய சூரியகிரகணம் இன்று தோன்றியது. இதனை பார்க்க, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டு மக்களை போல், சூரிய கிரகணத்தை பார்க்க நானும் ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, மேகமூட்டம் காரணமாக சூரியனை பார்க்க முடியவில்லை. ஆனால், நாட்டின் பல பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் கலந்துரையாடி, சூரிய கிரகணம் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். என ட்விட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.