விக்ரம், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழாவில், நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் விக்ரம்.
விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
விக்ரம் பேசும்போது, ‘கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இந்த படத்தோட ஆரம்பமே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பமாகுது.
சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான். அதுக்காக சூரிகிட்ட நா சாரி கேட்டுகிறேன். இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.