கண்ணசைவு மூலம் புகழ் பெற்ற பிரியா வாரியர், எதற்காக சூர்யா படத்தை இழந்தார் என்ற காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஒரே ஒரு கண்ணசைவு மூலம் தென்னிந்திய திரையுலகத்துக்கே பரிச்சயம் ஆகிவிட்டார் பிரியா வாரியர். அந்த கண்ணசைவு பாடல் இடம்பெற்ற ‘ஒரு அடார் லவ்’ படம் வெளியாக தயாராகிவிட்டது.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பிரியா வாரியருக்கு வாய்ப்புகள் அலைமோதுகின்றன. ஆனால் அவரால் எந்த புதிய படத்திலும் கமிட் ஆக முடியவில்லை என கூறியுள்ளார்.
கேட்டால் ‘நான் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அடார் லவ் படம் வெளியான பிறகே அடுத்த படம் பற்றி முடிவெடுப்பேன்’ என்கிறார்.
ஒரு அடார் லவ் படத்தின் ஒப்பந்தத்தின் படி அந்த படம் வெளியாகும் வரை வேறு படத்தில் கமிட் ஆகக் கூடாதாம். இதனால் தான் பிரியா வாரியர் காத்திருக்கிறாராம். பிரியா வாரியர் இழந்த தமிழ் வாய்ப்புகளில் சூர்யா படமும் உண்டாம்.