இஸ்ரேல் உள்துறை மந்திரி சில்வன் ஷலோம், இவர் பல பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்ததாக புகார்கள் எழுந்தது. எனவே, அவர் பதவியை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் தன் மீது கூறப்படும் ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகளை ஷலோம் மறுத்தார். இருந்தும் அவர் மீது விசாரணை நடத்த அட்டர்னி – ஜெனரல் உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீப காலமாக இஸ்ரேலில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ‘செக்ஸ்’ புகாரில் சிக்கி ராஜினாமா செய்து வருகின்றனர். பினான் மாசல் என்ற எம்.பியும், உயர் பொலிஸ் அதிகாரியும் பதவி விலகினார். முன்னாள் அதிபர் மோஷி கத்சவ் கற்பழிப்பு புகாருக்குள்ளாகி 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.