சென்னையில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் கடந்த சில வாரங்களில் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் சுமார் 25 பேர்வரை இந்தக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு 43 சுகாதார மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்ச்சலுக்கான அறிகுறியுடன் வருபவர்களின் எண்ணிக்கை தினமும் கணக்கெடுக்கப்படுகிறது.
இவ்வருடத்தில் டெங்கு நோயினால் 10,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் சுமார் 25 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக மாநில அரசின் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டியுள்ளது..