இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிற்காக வீரர்களின் ஏலம் பெங்களூரில் தொடங்கியுள்ள நிலையில் மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் விடுதல் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் இடம்பெறுவர், ஏற்கனவே மொத்தம் 18 வீரர்கள் தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 578 வீரர்களில் 182 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி சென்னை அணியால் வாங்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி 7.60 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

#rishma