சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு பற்றிய அறிவிப்பு பலகையில் தமிழ், ஹிந்தி மொழிகள் நீக்கப்பட்டு ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குநா் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு பற்றி அறிவிப்பு பலகையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், 3 மொழிகளில் அறிவிப்பு வெளியிடுவதால் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காலை நேரங்களில் மட்டும் தமிழ், ஹிந்தி மொழிகள் நீக்கப்பட்டு ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குநா் இன்று(08) அறிவித்துள்ளார்.