ஸீகோ தொலைபேசியானது தனது புதிய செல்ஃபி ஸ்மார்ட் தொலைபேசியான Eon64i Swivel இனை அண்மையில் அறிமுகம் செய்தது. இதுவே இலங்கையின் முதலாவது சுழற்றப்படக் கூடிய கேமராவைக் கொண்ட ஸ்மார்ட் போனாகும்.
ஸீகோ தனது நட்சத்திர வர்த்தக நாம தூதுவரான டி.எம். டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்தமையைக் கொண்டாடும் முகமாகவே இச்சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸீகோ தனது புரட்சிகரமான, பல சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் போனான Eon64i இனை கடந்த மாதத்தின் பிற்பகுதியில் சந்தைக்கு அறிமுகம் செய்தது.
இந்த புதிய சாதனமே டி.எம். டில்ஷானை சந்தைப்படுத்தல் நடவடிக்கையின் நாயகனாக கொண்டு முதலாவதாக வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனமானது சிறந்த செயற்பாடு, அதிவிசேட பற்றறி பாவனை, இலகுவான பாவனை அனுபவத்தை வழங்கும் ப்ளாஷர் உடனான, சுழற்றப்படக்கூடிய முற்பக்க மற்றும் பிற்பக்க 8MP சோனி ப்ளாஷர் கெமரா என்பவற்றின் துணையுடன் செல்ஃபி தொலைபேசி பிரிவில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது.
அத்துடன் அதிசிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெற்றுத்தர 4.7 அங்குல, அதி துல்லியமான திரையையும் கொண்டுள்ளது.
Eon64i Swivel ஆனது கவர்ச்சிகரமான தோற்றம், செயற்பாட்டைக் கொண்டிருப்பதுடன் பாவனையை இலகுவாக்க 10.1 மி.மீற்றர் அளவிலான மெல்லிய உடற்பாகத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் சிறந்த செயற்பாட்டை உறுதிசெய்ய Quad core chipset மற்றும் அதிக நேரம் பயன்படுத்துவதற்காக 1800 MAh பற்றறியையும் கொண்டுள்ளது.