சேயா சௌதவ்மி விவகாரம் – வழக்கு இன்று மீள் விசாரணையில்

கொட்டதெனியாவில் சேயா சௌதவ்மி பாலியல் வன்புணர்வுக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்பா ராஜரத்ன முன்னிலையில் குறித்த இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான சாட்சி அறிக்கை திருத்தலும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி சம்பவம் தொடர்பாக சாட்சி அறிக்கை திருத்தல் 6 மணி நேரம் இடம்பெற்றதுடன், அந்த சாட்சி அறிக்கை திருத்தப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் செம்டம்பர் மாதம் 12 ஆம் திகதி சேயா சௌதவ்மி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டாலும் தற்போது குறித்த குற்ற செயல் தொடர்பாக சமன் ஜயதிலக்க என்ற பெயருடைய 32 வயதான நபர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.