சேவைக்கு சமூகமளிக்காதவர்களின் இடங்களுக்கு புதிய பணியாளர்கள்..

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை(11) சேவைக்கு சமூகமளிக்காதவர்களின் இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புகையிரத பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

கடந்த 06ம் திகதி புகையிரத பணியாளர்களால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படாதவரை போராட்டம் தொடரும் என புகையிரத பணியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

-reeshmaa