சேவையினை தொடர வேண்டுமாயின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு இ.போ.ச பஸ்கள் கோரிக்கை..

சேவையில் ஈடுபட்டுள்ள, இலங்கைப் போக்கவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் மீது, பல்வேறு இடங்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில், தனியார் பஸ்கள் இன்று(02) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், இ.போ.ச பஸ்களே, சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சேவையைத் தொடர வேண்டுமெனில், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, இ.போ.ச பஸ் சங்கத்தின் ஊடக பேச்சாளார், பொலிஸாரை கோரியுள்ளார்.