சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை இரத்து செய்தல் மற்றும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பனவற்றை முன்வைத்து இன்று(26) போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர் சங்கம், அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.