சைட்டத்திற்கு எதிராக ‘மாணவ மக்கள் சக்தி அரங்கம்’ என்ற பெயரில் புதியதோர் எதிர்ப்பு பேரணி..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(07) தொடக்கம் ‘மாணவ மக்கள் சக்தி அரங்கம்’ என்ற பெயரில் புதியதோர் எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்க உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வுகள் காலியில் ஆரம்பமாகவுள்ளதாகவும், மாணவர் எழுர்ச்சி பேரணிகளை மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ள தீர்மானிக்கட்டுள்ளதாகவும் மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன் ஆரம்ப கட்ட எதிர்ப்புப் பேரணி நாளை(06) காலியில் இடம்பெறவுள்ள நிலையில் இரத்மலானையில் சகல தனியார் நிறுவன பணியாளர்களும் பணிபுறக்கணிப்புடன் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ள உள்ளனர்.

சைட்டம் எதிர்ப்பு பேரணி விரிவடைந்துச் செல்வதை அரசாங்கத்தால் தடுக்க முடியாது எனவும் லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)