சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த பிரச்சினைக்கு தமது அரசாங்கத்தின் மூலம் தீர்வு வழங்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த போதும், இதுவரை சைட்டம் பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எனவே, இந்தப் பிரச்சினைக் குறித்து கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய அவசர மத்தியக் குழு கூட்டம் ஏற்பாடு செயயப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சைட்டம் நிறுவனத்தின் தரம் மற்றும் ஏனைய காரணங்களை கவனத்தில் எடுத்து, அரசாங்கம் தொழிநுட்ப அறிவுடன் கூடிய தனிநபர்களின் கூட்டு முயற்சியை அவதானித்து சைட்டத்தை தடை செய்வதற்கு முன் வரவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.