சைட்டம் இறுதித் தீர்வுத் திட்ட குறிப்பு இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு…

சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களது பிரச்சினை குறித்து ஆராய்ந்து அது குறித்து தொகுக்கப்பட்ட தீர்வுத் திட்ட அறிக்கை இன்று(20) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச மருத்துவ பீட பெற்றோர் சங்கம் மற்றும் சைட்டம் மாணவர்களது பெற்றோர் சங்கம் ஆகியவை உத்தியோகபூர்வமாக நேற்று(19) கையொப்பமிட்டிருந்ததாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சைட்டம் எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டத்தினை பெற்றுக் கொடுப்பதில் சில நபர்கள் முயற்சிப்பதாகவும், அதனால் தீர்வு எட்டாது என்றும் குறித்த முயற்சியால் மாணவர்கள் மீண்டும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

#rishma