எதிர்வரும் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சைட்டம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு தமது முழுமையான பங்களிப்பை செலுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
சைட்டம் தரமற்றது என இங்கிலாந்தும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோர் நெவில் பெர்னான்டோவின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றனர்.
எவ்வாறெனினும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது முழுப் பங்களிப்பையும் செலுத்தி போராடும் என லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)