சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிற்கு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, இன்று(25) முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிராக, கொழும்பு – கோ​ட்டை மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்கவே, குறித்த இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்புக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே, இந்த இடைக்காலத் தடையுத்தரவை பொலிஸார் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma