சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று  கொழும்பை வந்தடைகின்றது

கண்டியில் இருந்து கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை (SAITM) மூடுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி நேற்று கடவத்தையுடன் நிறுத்தப்பட்டது. இன்று  அப்பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.
இப்பேரணி  கொழும்பை  வந்தடைந்ததும் கோட்டையில் எதிர்ப்பு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.இக்கூட்டத்தில் சில தொழிற்சங்கத் தலைவர்களுடன்  அரசியல் வாதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.